Header Ads

test

கடமையிலிருந்த காவல்துறை அதிகாரியை கைது செய்த விசேட அதிரடிப்படை.

 கிலோ கணக்கில் கேரள கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் குறித்த காவல்துறை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வரகாபொல பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான காவல்துறை உத்தியோகத்தர் ஆவார்.

பேலியகொட அதிவேக நெடுஞ்சாலை காவல் நிலையத்தில் கடமையாற்றும் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த காவல்துறை உத்தியோகத்தரிடம் இருந்து 04 கிலோகிராம் 191 கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக ராகம காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த பெறுமதி 3 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட போது 02 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.


No comments