காதல் ஜோடியின் தவறான முடிவால் உயிர் பிரிந்த காதலி.
திம்புலபத்தனை ஸ்டோனிகிளிப் பகுதியிலுள்ள விடுதியொன்றில் காதல் ஜோடியொன்று நஞ்சு அருந்திய நிலையில், யுவதி உயிரிழந்ததுடன், இளைஞன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் உயிரிழந்தவர் யுனிபீல்ட் தோட்டத்தைச் சேர்ந்த 17 வயதான கார்த்திகா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உயிரிழந்த யுவதியும் இளைஞனும் காதலர்கள் என்றும், அவர்கள் திருமணம் செய்ய இரு தரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததால், தற்காலிகமாக மூடப்பட்டிருந்த உல்லாச விடுதிக்குள் நுழைந்து, ஒரே நேரத்தில் இருவரும் நஞ்சு அருந்தியுள்ளனர்.
நஞ்சு அருந்துவதற்கு முன்பாக, இளைஞன் தனது நண்பர் ஒருவருக்கு அலைபேசியில் தகவல் வழங்கியதாகவும், இதனையடுத்து அந்த நண்பர், திம்புலபத்தனை பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
உடனடியாக பொலிசார் அந்த விடுதிக்கு சென்று பார்த்த போது, யுவதி உயிரிழந்த நிலையிலும் இளைஞன் ஆபத்தான நிலையிலும் காணப்பட்டுள்ளார் இதனையடுத்து இளைஞன் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
தம் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், விசம் அருந்தும் விபரீத முடிவை எடுத்ததாக இளைஞன் வாக்குமூலமளித்துள்ளார்.
மேலும் உயிரிழந்த யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Post a Comment