தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்த தமிழ் மாணவி.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட கலாச்சார போட்டியில் தமிழ் பிரிவு அறிவிப்பாளர் போட்டியில் தேசிய மட்டத்தில் மாணவி ஒருவர் முதல் இடத்தை பெற்று மாவட்டத்திற்கும் பிரதேசத்திற்கும் பெருமையை தேடித்தந்துள்ளார்.
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை அஸ்வினி என்ற மாணவியே முதலிடத்தை பிடித்துள்ளார்.
குறித்த மாணவிக்கு முகநூலில் மாவட்ட மக்களும், பிரதேச மக்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Post a Comment