யாழில் பேருந்து நிலையத்தில் தனித்து நின்ற சிறுமிக்கு நேர்ந்த துயரம்.
யாழ் பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் தனியே நின்ற 15 வயதான சிறுமியை வீடொன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருகையில்,
பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் நேற்று அதிகாலை 4 மணியளவில் தனித்து நின்ற 15 வயதுச் சிறுமியை பொலிஸாரால் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
பருத்தித்துறை கற்கோவளம் பகுதியிலுள்ள வீடொன்றுக்கு நேற்றுமுன்தினம் இரவு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி, இருவேறு நேரங்களில் 2 இளைஞர்களினால் வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கைக்காக பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் 19 மற்றும் 24 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கைதான சந்தேக நபர்கள் இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment