பல தடைகளையும் தாண்டி யாழ் பல்கலையில் ஏற்றப்பட்ட கார்த்திகை தீபம்.
தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை தீபத் திருநாள் பல்வேறு தடைகளையும் தாண்டி மாணவர்களால் யாழ்ப்பாண பல்கலையில் இடம்பெற்றதுள்ளது.
நேற்று (18) வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் பல்கலைக்கழகத்திற்கு கார்த்திகை விளக்கீட்டு தீபம் ஏற்றி அனுட்டிப்பதற்காக மாணவர்கள் சென்ற நிலையில் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் உள்நுழைய தடை விதிக்கப்பட்டது.
இதேவேளை பல்கலையில் ஆன்மீக ரீதியான செயற்பாடுகளை மேற்கொள்ளவும் தடை விதிப்பதா என மாணவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் சென்று கார்த்திகை தீபங்களை ஏற்றியுள்ளனர்.
மேலும், மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் புலனாய்வாளர்கள் அப் பகுதியில் நின்றமையை அவதானிக்க முடிந்ததுடன்,சம்பவ இடத்திற்கு இராணுவ மோட்டார் வாகனங்களும் வருகை தந்துள்ளதாக அறிய முடிகின்றது.
Post a Comment