வானிலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்.
இலங்கையை சுற்றி மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது நாட்டை விட்டு விலகிச்செல்வதாக வானிலை மையம் அறிவித்துள்ளது..
எனினும் வானிலையில், இன்று நாட்டில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எதிா்வுகூறியுள்ளது.
மாலை அல்லது இரவு வேளையில் தீவின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும்
மேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் காலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேற்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது வீசும் பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Post a Comment