திருகோணமலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு.
திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உல்பத்வெவ பகுதியில் வீடொன்றில் இருந்து ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் இன்று (04) காலை மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.ஏ.நளீன் சமிந்த (40) என பொலிசார் தெரிவித்தனர்.
குறித் நபர் இரண்டாவது மனைவியுடன் தனியாக வீட்டில் வசித்து வந்ததாகவும், கடந்த இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருந்திருக்கலாம் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
Post a Comment