Header Ads

test

இலங்கை பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக பதவியேற்கும் தேரர்கள்.

 களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக களனி ரஜமகா விகாரையின் பீடாதிபதி, கொள்ளுப்பிட்டி மஹிந்த சங்கரக்கித தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, சங்கரக்கித தேரர் களனி பல்கலைக்கழகத்தின் பௌத்த மற்றும் பாளி பீடத்தின் தலைவராகப் பதவி வகித்தார்.

கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்ற இவர், கொழும்பு கொள்ளுப்பிட்டியைச் சேர்ந்த அப்புஹாமி தசநாயக்க மற்றும் பொடிஹாமினே தசநாயக்க ஆகியோரின் புதல்வராவார்.

இதேவேளை, கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக நாரஹேன்பிட்டி அபயராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் அண்மையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments