Header Ads

test

மாணவர்களிடையே வேகமாக பரவிவரும் கொவிட் தொற்று.

வவுனியா வடக்கு வலயத்தைச் சேர்ந்த பாடசாலை ஒன்றின் இரு ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தரம் 1 மற்றும் தரம் 5 மாணவர்களின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து அவர்களின் பெற்றோர் குறித்த இருவரையும் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து சென்று இன்று அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டனர்.

இதன்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குறித்த இரு மாணவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை இனங்காண சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


No comments