நாட்டில் ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை.
நாட்டில் ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையானது இன்று மாலை 4 மணி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி களுத்துறை, கண்டி, குருநாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹூப்பிட்டிய மற்றும் வரக்காபொல பிரதேச செயலக பிரிவுகளுக்கு மணி சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ருவன்வெல்ல, மாவனெல்ல, கலிகமுவ, தெஹியோவிட்ட, கேகாலை, தெரணியல, யட்டியாந்ததோட்டை, அரநாயக்க மற்றும் ரம்புக்கனை ஆகிய பகுதிகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment