Header Ads

test

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியில் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்.

 ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் தமிழ் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பி.எஸ்.எம். சார்ள்ஸ் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினராக நியமிக்கப்படவிருந்தார். எனினும், பின்னர் அவரை ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் நியமிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்த செயலணியின் தலைவராக ஞானசார தேரர் அறிவிக்கப்பட்டிருந்தார்.

மேலும் இந்த செயலணியில் தமிழர்கள் எவரும் இணைத்துக் கொள்ளப்படவில்லை. இவ் விடயம் குறித்து பலரும் அதிருப்பதி வெளியிட்டிருந்த நிலையில், தமிழர்கள் மூவரை செயலணியில் இணைத்துக்கொள்ள ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த பின்னணியிலேயே ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் தமிழ் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


No comments