கிளிநொச்சியில் பிரதேச செயலகம் முன்பாக போராட்டம் நடத்திய பொது மக்கள்.
கிளிநொச்சி பெரிய பரந்தன் பகுதியில் மதுபானசாலைக்கான அனுமதி வழங்குவது தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் பிரதேச செயலகம் முன்பாக போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
பெரிய பரந்தன் பகுதியில் மதுபானசாலை ஒன்றுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் இன்றைய தினம் கொழும்பில் இருந்து வந்த அதிகாரிகள் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கும் நிலையில் எதிர்ப்பு தெரிவித்து குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதிய மதுபானசாலை அமையவுள்ள இடத்திற்கு அருகில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி, கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரி மற்றும் விஞ்ஞானக் கல்வி நிலையம் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் காணப்படுவதாக பலமுறை மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவித்தனர்.
எனவே குறித்த மதுபானசாலை விடயத்தில் பிரதேச மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளையும் கருத்தில் கொண்டு புதிய மதுபான சாலை அமைப்பதனை தடுத்து நிறுத்துமாறும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment