தமிழ்தேசிய கட்சிகளை ஒன்றிணைத்து தலைமை தாங்க சித்தார்த்தனே பொருத்தமானவர் என மாவை சேனாதிராசா தெரிவிப்பு.
தற்போதைய சூழ்நிலையில் தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தலைமைகளிடத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தும் நடவடிக்கைக்கு, அனைவருடனும் நட்பாக பழகக் கூடிய சித்தார்த்தனே தலைமை தாங்கி, அதனை முன்கொண்டு செல்ல வேண்டும் என தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தமிழீழ மக்கள் கழகத்தின் பொதுச்செயலாளர் சதானந்தனின் நினைவுதின நிகழ்வில் உரையாற்றும் போதே, அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
தமிழ் மக்களுடைய பிரச்சினை தொடர்பாக சரியான ஒரு கோட்டில், நாங்கள் பயணிக்கவில்லை என்பதை பெரும்பாலானோரின் கருத்துக்கள் தெளிவாக கோடிட்டு காட்டுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
ஆகவே, அதற்கான பொறுப்புகளை தானும் ஏற்க வேண்டி இருப்பதுடன், நாங்கள் இணைந்து வேலை செய்ய வேண்டும் என்கிற விடயம் நீண்ட காலமாக பேசப்பட்டு கொண்டிருக்கின்றது.
ஆனால் துரதிஷ்டவசமாக இந்த விடயம் இன்னும் கைகூடவில்லையெனவும் அவர் கவலை வெளியிட்டிருந்தார். இருப்பினும், அதற்காக நாங்கள் இதை கைவிட்டுவிட முடியாது இதை கைகூட வைக்கின்ற முயற்சியில் நாங்கள் ஈடுபட்டே ஆக வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment