வவுனியாவில் வயிற்று வலி என சென்ற மாணவி கர்ப்பமாகியுள்ள அதிர்ச்சி சம்பவம்.
வவுனியாவில் வயிற்று வலியென மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட 12 வயது சிறுமி ஒருவர் கர்பமாகியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வவுனியா ஓமந்தை குஞ்சுக்குளம் பகுதியினை சேர்ந்த 12 வயது மாணவியொருவர் வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்போது வைத்தியர்கள் மாணவியை சிகிச்சைக்குட்படுத்தியபோது அவர் கர்ப்பம் அடைந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து வைத்தியர்கள் இந்த தகவலினை பொலிஸாருக்கு வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த மாணவியிடம் பொலிசார் நடத்திய விசாரணையில் தன்னை ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக மாணவி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment