யாழில் பரிதாபகரமாக உயிரிழந்த விளையாட்டு வீரர்.
யாழ்.வடமராட்சியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மைக்கல் விளையாட்டுக் கழக இளம் வீரர் பரிதாபமாக உயிழந்துள்ளார்.
இவ்விபத்து சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் யாழ் மாவட்டம் வடமராட்சி மந்திகையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக் கழகத்தின் இளம் வீரா் 22 வயதான கண்ணன் காந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
மேலும் இவ்விபத்து குறித்து தெரியவருவதாவது, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது என பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை வடமாரட்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment