இலங்கை தலைநகர் கொழும்பில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம்.
இலங்கையின் தலைநகர், கொழும்பிலுள்ள விருந்தகமொன்றில் இன்று காலை வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கொழும்பு 7, பழைய குதிரைப் பந்தய மைதானத்தில் அமைந்துள்ள விருந்தகத்திலேயே இந்த வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது.
வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து விருந்தகத்தில் தீப்பற்றிக் கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதுடன், எரிவாயுக் கசிவினால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
Post a Comment