கொழும்பில் முக்கிய பகுதி ஒன்றில் ஏற்பட்டுள்ள பாரிய தீப்பரவல்.
கொழும்பில் உள்ள வைத்தியசாலை ஒன்றுக்கு அருகில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தானது இன்று (28) காலை கொழும்பு களுபோவில் வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
குறித்த தீ பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
மின் ஒழுக்கு காரணமாகவே இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. எவ்வாறெனினும் அது குறித்த உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
Post a Comment