யாழில் கடற்படையால் பெருமெடுப்பில் சுவிகரிக்க இருந்த காணிகளை பொது மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.
யாழ்.மாதகலில் கடற்படையினரின் தேவைக்காக பெருமெடுப்பில் பொதுமக்களின் காணியை சுவீகரிப்பதற்காக அளவீடு செய்யும் முயற்சி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் எதிர்ப்பினால் நிறுத்தப்பட்டுள்ளது.
மாதகல் ஜே 150 கிராம சேவையாளர் பிரிவில் தனியார் காணிகளில் நிலைகொண்டுள்ள கடற்படையினர், அக்காணிகளை சுவீகரிப்பதற்கான அளவீட்டு பணி இன்று காலை முன்னெடுக்கப்படவிருந்தது.
குறித்த காணிகளை அளவீடு செய்வதற்காக நிலஅளவை திணைக்கள உத்தியோகஸ்தர்கள் வருகைதந்திருந்த நிலையில், காணி உரிமையாளர்கள், அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சி சார்ந்தவர்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்ததை அடுத்து , காணி அளவீட்டுப்பணிக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதாக கூறப்படுகின்றது.
Post a Comment