யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் வாரத்தை முன்னிட்டு மலரஞ்சலி செலுத்திய மாணவர்கள்.
மாவீரர் வாரத்தை முன்னிட்டு யாழ் பல்கலைகழகத்தில் மாவீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழகத்தில் வருடா வருடம் மாவீரர் வாரத்தை முன்னிட்டு பல்கலைக்கழக மாணவர்களினால் மலரஞ்சலி செலுத்துவது வழக்கமாக முன்னெடுக்கும் ஒரு செயற்பாடாக இருந்தது.
இந்நிலையிலேயே தற்போது மாவீரர் வாரம் என்பதால் மாணவர்கள் முழந்தாளில் இருந்து வீரமறவர்களுக்கு தமது ஆத்மார்த்தமான அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.
இதன் போது பல்கலைக்கழகச் சூழலில் இராணுவத்தினரும் காவல்துறையினரும் இராணுவ புலனாய்வுப் பிரிவினரும் மாணவர்களை அச்சுறுத்துகின்ற வகையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் மாணவர்கள் ஆத்மார்த்தமான முறையில் தமது அஞ்சலிகளை செலுத்தினர்.
Post a Comment