Header Ads

test

பாழடைந்த வீட்டிற்குள் சிறுமியை இழுத்துச் சென்ற இளைஞன் பொலிஸாரால் கைது.

 சிறுமி ஒருவரை பாழடைந்த வீட்டிற்குள் இழுத்து சென்ற 17 வயது இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு தீர்த்தக்கரைப்பகுதியில் வீதியால் சென்ற ஆறு வயதான சிறுமியை பாழடைந்த வீட்டிற்குள் 17 வயது இளைஞன் ஒருவர் இழுத்து சென்றுள்ளார். குறித்த சிறுமி கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது அவரது வாயைப் பொத்தி அருகே இருந்த பாழடைந்த வீட்டுக்குள் இழுத்து சென்றுள்ளார்.

அதே சமயத்தில் குறித்த சிறுமி இளைஞனிடமிருந்து தப்பித்து வெளியே வந்து கூச்சலிட்டதை  தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் குறித்த சிறுமியை காப்பாற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து 17 வயதான குறித்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.     


No comments