யாழில் இ.போ.சபை பேருந்தால் பெண் ஒருவருக்கு நேர்ந்த துயரம்.
யாழ்.பருத்தித்துறை - மண்டான் வீதியில் இ.போ.ச பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று முற்பகல் 11 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வாதரவத்தை பகுதியைச் சேர்ந்த எஸ்.சிவகலா (வயது -30) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
விபத்தில் சிக்கிய பெண் நோயாளர் காவுவண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த பெண் பயணித்த மோட்டார் சைக்கிள் பலத்த சேதத்திற்கு உள்ளான நிலையில், குறித்த விபத்து தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Post a Comment