குடிபோதையில் பெண்களிடம் சில்மிசம் செய்ய முயன்றவருக்கு நடந்த தரமான சம்பவம்.
குடிபோதையில் பெண்களிடம் சில்மிசம் செய்ய முயன்றவரை அங்கிருந்த மக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி வீதி லிங்கநகர் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
நேற்றையதினம் இரவு இடம்பெற்றதாக கூறப்படும் இச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
குறித்த நபர் குடிபோதையில் திருகோணமலை கண்டி பிரதான வீதியில் பயணித்த வாகனங்களுக்கு கற்களால் எறிந்து சேதப்படுத்தியதுடன் வீதியால் பயணித்த பெண்கள்மீது முறையற்ற விதத்தில் நடந்து கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
இதனையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் குறித்த நபரை தாக்கியதுடன் பொலிசாரிடம் ஒப்படைத்தனர். இவ்வாறு குடிபோதையில் அட்டகாசம் செய்த குறித்த நபர் கந்தளாய் முள்ளிப்பொத்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதோடு , சிகிச்சை ஒன்றிற்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு வந்த அவர் , நகரில் பல வர்த்தக நிலையங்களில் அட்டகாசம் செய்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதக திருகோணமலை தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
அதேவேளை குறித்த நபரினால் சொகுசு கார் ஒன்றும் சேதமடைந்துள்ளதுடன், அவரது சேட்டையால் வீதியால் சென்ற பயணிகளும் பாதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் பலர் திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் கைதான குறித்த நபர் சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Post a Comment