யாழில் தீயில் எரிந்து பலியான பெண் - கணவன் பொலிசாரால் கைது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் பெண் ஒருவர் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
பருத்தித்துறை - திக்கம் அல்வாய் பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் பராமநாதன் சசிகலா என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 13 ஆம் திகதி மதுபோதையில் வீட்டுக்கு வருகை தந்த கணவன் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து மண்ணெண்ணையை தன் மீது ஊற்றி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டியுள்ளார். இந்நிலையில் கணவன் தன்னிடமிருந்த லைற்றர் மூலம் பாவடையில் தீ வைத்ததை தொடர்ந்து மனைவி தீயில் எரிந்துள்ளார்.
அக்கம்பக்கத்தினர் குறித்த பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் பொலிசார் கணவனைக் கைது செய்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
Post a Comment