பாடசாலை மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்.
எதிர்வரும் 22ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் தரம் 6 முதல் 9 வரையான மாணவர்கள் தற்போது அமுலிலுள்ள சுகாதார வழிகாட்டுதலின் கீழ் பாடசாலைக்கு அழைக்கப்படுவார்கள் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, பகுதி முறையில் மாணவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்படுவார்கள் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
ஒரு வகுப்பில் 20 இற்கம் குறைவான மாணவர்கள் இருந்தால் அவர்கள் தினசரி பாடசாலைக்கு அழைக்கப்படுவார்கள். எனினும் 40 வரையான மாணவர்கள் இருக்கும் வகுப்பிற்கு ஒரு நாள் ஒரு பகுதி மாணவர்களும் மறு நாள் அடுத்த பகுதி மாணவர்களும் அழைக்கப்படுவார்கள்.
சில சந்தர்ப்பங்களில் ஒரு வாரம் முழுவதும் ஒரு பகுதி மாணவர்களும் அடுத்த வாரம் முழுவதும் இரண்டாவது பகுதி மாணவர்களும் சுகாதார வழிக்காட்டல்களுக்கமைய அழைக்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 22ஆம் திகதியின் பின்னர் அறநெறி பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதி தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment