மண்ணுக்காக மரணித்தவர்களை நினைவுகூர அனுமதியுங்கள் - நாடாளுமன்றத்தில் குரலெழுப்பிய செல்வம் அடைக்கலநாதன்.
போாின்போது தமது மண்ணுக்காக, தமது இனத்துக்காக எந்த எதிா்பாா்ப்பையும் கருதாது போரிட்டு உயிா் நீத்தவா்களுக்கான நிகழ்வுகளுக்கு இடம் தரவேண்டும்.
மரித்தவா்களை மதிப்பதை அரசாங்கம் தடுக்கிறது.எனினும் குறித்த நிகழ்வுகளை நினைவுக்கூற அரசாங்கம் அனுமதித்தால், உயிா்நீத்தவா்களுக்கான நிகழ்வுகளை சுதந்திரமாக நிகழ்த்திவிட்டு தமது உறவுகளின் ஆத்மசாந்திக்காக பிராா்த்தனைகளை மேற்கொள்வார்கள்.
இல்லையேல், இனரீதியான உணர்வுகளால் மக்கள் வீறுகொண்டு எழுவாா்கள் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.
இதேவேளை 13வது திருத்த சட்ட மூலத்தை உாியவகையில் செயற்படுத்தி இந்தியாவுடன் நல்லுறவை, இலங்கை அரசாங்கம் வளா்த்துக்கொள்ள முயற்சிக்கவேண்டும் என்றும் அவர் கோாிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாகாணசபைகளின் அதிகாரங்களை வழங்கவேண்டும் என தெரிவித்த போது குறுக்கிட்ட அமைச்சர் ஜி.எல் பீரிஸ், மாகாணசபை தோ்தல் தாமதமாவதற்கு நல்லாட்சி அரசாங்கமே காரணம் என்று குற்றம் சுமத்தினார்.
எனினும் இதனை ஏற்றுக்கொள்ளாத செல்வம் அடைக்கலநாதன், மாகாணசபைத் தோ்தலை பற்றி கவனம் செலுத்தப்படவேண்டியது அவசியம் எனினும் மாகாணசபைகளுக்கான அதிகாரங்களைப் பற்றியே தாம், கோாிக்கை விடுப்பதாக குறிப்பிட்டார்.
இதேவேளை 2022 ஆம் ஆண்டுப் பாதீட்டில் விஹாரைகள் அமைப்பதற்கு அதிக நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் வடக்குகிழக்கில் இன்னும் விஹாரைகள் அமைக்கப்படப்போகிறதா? என்று செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
Post a Comment