நடு வீதியில் சாரதியை தாக்கிய பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த சம்பவம்.
சப்ரகமுவ சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் ரன்மல் கொடிதுவக்கு வீதியில் வைத்து சாரதியை தாக்கிய காணொளி காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. இதையடுத்து அவர், காவல்துறை மருத்துவ சேவைகள் மற்றும் நலப்பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், தற்போது சித்திரவதை மற்றும் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கும் உள்ளாகியுள்ளார். சட்ட நிறுவனம் ஒன்றினால் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இது தொடர்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
வீதியில் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் காவல்நிலையத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள், சட்ட நிறுவனத்தின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாரதி சார்பில் முன்னிலையாகியுள்ள நீலகண்டன் மற்றும் நீலகண்டன் நிறுவனத்தினர், சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமது கட்சிக்காரர் சாார்பில் கோட்டாபயவிடம் கோரியுள்ளனர்.
எவ்வாறாயினும், நீலகண்டன் மற்றும் நீலகண்டன் சட்டநிறுவனக் கூற்றுப்படி, வீதியில் இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து தமது கட்சிக்காரர், கிாியெல்ல காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒரு அறைக்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் கட்சிக்காரர் நிர்வாணமாக்கப்பட்டு மண்டியிடும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் அந்த சட்ட நிறுவனம் கூறியுள்ளது. அப்போது இரண்டு அதிகாரிகள் முன்னிலையில் தமது கட்சிக்காரரை, சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபா் தாக்கினார். இந்தநிலையில் தங்கள் கட்சிக்காரர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், நிர்வாணமாக புகைப்படம் எடு்ககப்பட்டதாகவும் சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து தமது கட்சிக்காரர், கிரியெல்ல கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு அவரது காயங்கள் பரிசோதிக்கப்பட்டதாகவும் நீலகண்டன் மற்றும் நீலகண்டன் சட்ட நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தை அடுத்து, சாரதி மற்றும் அவரது குடும்பத்தினர் உயிருக்கு பயந்த நிலையில் உள்ளதாகவும் சட்டநிறுவனத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment