Header Ads

test

கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த நபருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் - நாடாளுமன்றில் சாள்ஸ் நிர்மலநாதன் காட்டம்.

 கனடாவில் இருந்து அண்மையில் யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவரை புலனாய்வாளர்கள் அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

த.தே. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நேற்றையதினம் இது குறித்து நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் கூறுகையில்,

இலங்கையில் மனித உரிமைகள் மிக மோசமான நிலையில் இருக்கின்றது. நீண்ட காலமாக மனித உரிமைகளை நிலைநாட்ட முடியாமல் அரசாங்கம் இருந்து வருகின்றது. அண்மையில் கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த தனது நண்பர் ஒருவர் இராணுவப் புலனாய்வாளர்களால் அச்சுறுத்தப்பட்டார்.

அவரை பின் தொடர்ந்த புலனாய்வாளர்கள் ஏன் இலங்கை வந்தீர்கள்? எதற்காக வந்தீர்கள்? என்றவாறு விசாரணை செய்துள்ளனர். அத்துடன், நீங்கள் எங்களது அலுவலகத்திற்கு வரவேண்டும் என தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்ததுடன், அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர்.

இது குறித்து அந்த நண்பர் தன்னை தொடர்புகொண்டு முறையிட்டிருந்ததாகவும் சாள்ஸ் நிர்மலநாதன் கூறினார். சாவகச்சேரி பிரதேசத்தில் இருக்கின்ற கச்சாய் இராணுவ முகாமிற்கு உரித்தான இராணுவப் புலனாய்வாளர்கள் தன்னை தொடர்ச்சியாக மிரட்டுவதாக அந்த நண்பர் என்னிடம் குறிப்பிட்டார்.

நான் இலங்கையிலிருந்து போகவா? என்னால் இங்கு இருக்க முடியாதா? என்று அவர் தன்னிடம் கேள்வி எழுப்பியதாகவும் அவர் சபையில் கூறினார்.

இதனையடுத்து யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இது குறித்து முறைப்பாடு செய்யுமாறு அந்த நண்பரிடம் தான் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் சமப்யில் தெரிவித்த்திருந்தார்.


No comments