Header Ads

test

போராட்டத்தில் குதித்துள்ள சுகாதாரப் பிரிவினர்.

 தாதியர், இடைநிலை, நிறைவுகாண் சுகாதார மற்றும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் உட்பட 15 தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.

அதன்படி இன்று காலை 7 மணிமுதல் 48 மணித்தியாலங்களுக்கு அவர்கள் இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பள பிரச்சினை மற்றும் பதவி உயர்வு தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்து சுகாதாரப் பிரிவினர் இந்த அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.


No comments