பிறந்த குழந்தையை உயிருடன் புதைக்க முற்பட்ட தாய் கைது.
யாழ்ப்பாணம் - மட்டுவிலில் இளம்பெண் ஒருவர் தனக்கு பிறந்த குழந்தையை உயிருடன் புதைக்க முற்பட்டதாக அவருடைய தாயுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தையை உயிருடன் குறித்த பெண் புதைக்க முற்பட்டபோது அக்கம்பக்கத்தினர் அந்த பச்சிளம் குழந்தையை காப்பாற்றியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மட்டுவில் முத்துமாரி அம்மன் ஆலயத்தை அண்மித்த பகுதியில் 18 வயதுடைய இளம் பெண், தன்னுடைய பச்சிளம் குழந்தை ஒன்றை நிலத்தில் புதைப்பதற்கு அவருடைய தாயாருடன் முனைந்ததாக அயலவர்கள் குறிப்பிடுகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் மீட்கப்பட்ட குழந்தையை சாவகச்சேரி ஆதார வைத்திசாலையில் ஒப்படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment