Header Ads

test

வவுனியாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞன்.

 வவுனியாவில் இளைஞர் ஒருவரை கைது செய்த விசேட அதிரடிப்படையினர் குறித்த நபரை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவம் வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இன்று (16) செவ்வாய்கிழமை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

போலியான இலக்க தகடுகளை உருவாக்கி மோட்டார் சைக்கிள் வாகனங்களுக்கு பொருத்தி திருட்டுச் சம்பவங்களுக்கு பயன்படுத்துவதாக முல்லைத்தீவு விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வாகன இலக்கத்தகடுகள் வழங்கும் நிலையம் ஒன்று சோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த நிலையத்தில் கடமையாற்றிய இளைஞன் ஒருவரை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டதுடன், குறித்த பகுதியில் கணினி மற்றும் வாகன இலக்க தகடுகள் என்பனவும் விசேட அதிடிப்படையினால் எடுத்து செல்லப்பட்டு வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments