Header Ads

test

எரிவாயு கொள்கலன்கள் வெடிப்பு தொடர்பில் ஜனாதிபதியால் குழுவொன்று நியமனம்.

 எரிவாயு கொள்கலன்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் இந்தக் குழு நியமிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவால் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


No comments