ஆசிரியர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு.
சீஷெல்ஸ் பாடசாலைகளில் கணிதம் - விஞ்ஞானம் கற்பிக்க இலங்கை ஆசிரியர்களுக்கு அரிய வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது.
சீஷெல்ஸ் நாட்டிலுள்ள பாடசாலைகளில் கணிதம் மற்றும் விஞ்ஞானம் கற்பிக்க தகுதியான 17 ஆசிரியர் களைத் தெரிவு செய்யுமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்புக்கான இராஜாங்க அமைச்சு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வெளிவிவகார அமைச்சு வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சுக்கு வழங்கிய அறிவித்தலுக்கு அமைய இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 17 இலங்கை ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் இருப்பதாக இலங்கையிலுள்ள சீசெல்ஸ் துணைத் தூதரகம் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்தது.
அதன்படி கணித பாடத்துக்கு ஏழு இடங்களும், விஞ்ஞான பாடத்துக்கு பத்து இடங்களும் வெற்றிடமாக உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment