குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி.
யாழ்ப்பாணம், சுழிபுரத்தில் குளிக்க சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நண்பர்களுடன் பாடசாலையில் சிரமதானம் செய்யப்போவதாக கூறிவிட்டு சென்று சுழிபுரம் – திக்கரை பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலே குளிப்பதற்காக சென்றிருந்தார்.
அவ்வாறு குளித்துக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென நீரில் மூழ்கியுள்ளார். இதனை அவதானித்த சக நண்பர்கள் அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்து குறித்த மாணவனை காப்பாற்றி மூளாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதுடன் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும்போது உயிர் பிரிந்துள்ளது.
மூளாய் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் ரஜீவன் என்ற 18 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
Post a Comment