நாட்டில் பாண் மற்றும் கொத்து ரொட்டியின் விலை அதிகரிப்பு.
இன்று முதல் நாட்டில் பாண் மற்றும் கொத்து ரொட்டியின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோதுமை மாவுக்கான விலையை அதிகரிப்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம் இன்று எடுக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவும் நிலையிலேயே குறித்த தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளது.
இதன் காரணமாகவே இன்று முதல் பாண் மற்றும் கொத்து ரொட்டியின் விலை 10 ரூபாவாலும், ஏனைய துரித உணவு வகைகளின் விலையை 5 ரூபாவாலும் அதிகரிக்கவுள்ளது.
குறித்த பண்டங்களின் விலையை அதிகரிக்க பேக்கரி மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment