அரச ஊழியர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்.
சமகாலத்தில் மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார். இதனால் அரச ஊழியர்களுக்கு முறையான சம்பளக் கட்டமைப்பை தயாரிக்கும் வரை இடைக்கால கொடுப்பனவை பரிசீலிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்களின் நிலைமையை கருத்திற் கொண்டு அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். கோவிட் காரணமாக இன்று வழமையாக செயற்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கோவிட் மாத்திரமே செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய வரவு செலவுத் திட்டத்தில் பாரிய சம்பள முரண்பாடு தீர்க்கப்பட்டதாகவும், அதற்காக 30,000 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
Post a Comment