Header Ads

test

வடகிழக்கு பகுதியில் தொல்லியல் அகழ்வாய்வுகளை செய்யும் போது தமிழர் பண்பாட்டை பராமரிக்கும் வகையில் இடம்பெற வேண்டுமென டக்களஸ் தேவானந்தா வலியுறுத்தல்.

 வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மக்களின் தொல்லியல் சின்னங்களையும், பண்பாட்டு விழுமியங்களையும் பாதுகாக்கும் வகையில் அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிற்கும் (Vithura Wickremanayake) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் இன்று( 05)  யாழ். அலுவலகத்தில் இடம்பெற்ற சிநேகபூர்வ சந்திப்பின் போதே மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

எமது பாரம்பரிய தமிழர் வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாத்து, பராமரிக்கும் செயற்பாடுகளைத் சரியாக திட்டமிடல், அருங்காட்சியகங்களிலுள்ள கலைப்பொருட்களுக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்தல் மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் முறையான அகழ்வாய்வு பணிகளை நடைமுறைப்படுத்துவதனால் தமிழர் கலாச்சார வரலாற்று ஆதாரங்களைப் பாதுகாத்தல் போன்ற எமது மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் தொல்லியல் திணைக்களம் மற்றும் தொல்லியல்சார் அமைச்சின் செயற்பாடுகள் அமைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து யாழ். போதனா வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாகவும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து யாழ். பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி சத்தியமூர்த்தி மற்றும் வைத்தியக் கலாநிதி அரவிந்தன் ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது வைத்தியசாலையில் காணப்படும் ஆளணி மற்றும் கட்டுமாண தேவைப்பாடுகள் தொடர்பிலும் அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் வைத்தியர்கள் அமைச்சரிடம் எடுத்துரைத்திருந்தனர்.

குறித்த விடயங்களை அவதானத்திற் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று அவற்றுக்கான தீர்வை  பெற்றுத்ருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 




No comments