ஆசிரியர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த பெற்றோர்கள்.
திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பகுதியில் ஆசிரியர்களின் சம்பளத்தினை அதிகரிக்கக் கோரி பெற்றோர்களினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கந்தளாய் அக்ரபோதி தேசிய பாடசாலையின் முன்னால் இன்று இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது வருகின்ற வரவு செலவு திட்டத்தில் ஆசிரியர்களின் சம்பளத்தினை அதிகரிக்குமாறும் ஆசிரியர்களுக்கு கௌரவத்தினை பெற்றுக்கொடுக்குமாறும் பெற்றோர்களினால் கோசங்களும் எழுப்பட்பட்டன.
இவ்கவனயீர்ப்பு போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் கல்விக்கு முக்கியத்துவம் கொடு, ஆசிரியர்களின் சம்பளத்தினை வழங்கு, நாட்டின் எதிர்காலம் கல்வியில் தங்கியுள்ளது போன்ற பதாதைகளையும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்ட காரர்கள் ஏந்தியிருந்தனர்.
Post a Comment