வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஒரே நாடு ஒரே சட்டம் செயலணிக் குழு.
கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையிலான ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியினர் வடக்கிற்கான பயணம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளனர்.
இந்த செயலணியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி புதிய விசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புதிய வர்த்தமானி அறிவித்தலின் படி அந்த செயலணியானது இதற்கு பின்னர், இலங்கை ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற கோட்பாட்டை செயற்படுத்துவது சம்பந்தமாக பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கவனத்தில் கொண்டு மற்றும் மேற்படி கோட்பாட்டை ஆய்வு செய்ததன் பின்னர் அதற்கான இலங்கைக்கு பொருத்தமான கோட்பாட்டை தயாரிப்பதற்கான முன்மொழிவை மாத்திரமே சமர்ப்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கிற்கான பயணம் ஒன்றினை மேற்கொண்டு சந்திப்புக்களை நடத்தவுள்ளதாக தெரியவந்துள்ளது.
நாளை 20 ஆம் திகதி வவுனியா மாவட்ட செயலகத்திலும், 21 ஆம் திகதி யாழ்ப்பணத்திலும், 22 ஆம் திகதி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திலும், மாலை கிளிநொச்சி திறன் மேம்பாட்டு மையத்திலும் சந்திப்புக்களை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment