நஞ்சற்ற உணவுற்பத்திக்கு சேதனப் பசளை தயாரிப்பது எப்படி.
இன்று அசேதனப் பசளைகளின் பிரயோகம் மிதமிஞ்சிக் காணப்படுகிறது. இதனால் இயற்கையுடன் கூடிய சேதனப்பசளைகளின் முக்கியத்துவத்தை எமது விவசாயிகள் அறியாதுள்ளனர். அல்லது அறிந்தும் பயன்படுத்தாமலுள்ளனர். நவநாகரீக உலகில் நவீன நாகரீகம் போல் அசேதனப் பசளைகளின் பிரயோகம் சகலரையும் ஆட்கொண்டுவருகிறது.
அசேதன விவசாயத்தினால் கிடைக்கும் தீமைகளை தவிர்த்து மக்களை இயற்கை வளங்களை பயன்படுத்தி சேதன விவசாயம் செய்ய ஊக்குவிக்கவேண்டிய கட்டாய தேவை இன்று உள்ளது.
எமது சூழலில் இயற்கையாகக் கிடைக்கக் கூடிய பொருட்களை நாம் பயன்படுத்தாமல் நாம் விடுவதனால் குறித்த வளம் இழக்கப்பட்டு பொருட்களும் வீணடிக்கப்படுகின்றன. இதனால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைகின்றன.
எனவே அவற்றைப் பயன்படுத்தி பயிர்ச்செய்கையில் நாம் ஈடுபடுவதனால் இலகுவான முறையில் செலவுகள் இன்றி பயிர்ச் செய்கையை மேற்கொள்ள முடியும். அத்துடன் ஒன்றிணைந்த பாதுகாப்பு வளமை அதாவது ஒரே வகையான பயிர்களை ஒரு பகுதிக்குள் செய்வதனால் பயிர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் போது எல்லா பயிர்களும் சேதமாகும். நிலை ஏற்படுகின்றது.
எனவே அதை விடுத்து பல்லினப்படுத்தப்பட்ட பயிர்ச் செய்கை அதாவது பல வகையான பயிர்களை செய்வதனால் ஒரு பயிருக்கு ஏற்படும் நோய்த்தொற்றுக்கள் மறு பயிர்வகைகளை தாக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் மிக குறைவு. இதனால் பல்லினப்படுத்தப்பட்ட பயிர்ச்செய்கை மேற்கொள்ளல் .
மேலும் அசேதன விவசாயத்தில் களை நாசினிகள், பூச்சி நாசினிகள் அதிகமாக விசிறப்படுவதனால் மிதமிஞ்சிய பாவனையால் சூழல் பாதிப்புக்களும் கூடுதலாக ஏற்படுகின்றன. எனவே சுத்தமான நஞ்சற்ற உணவு உற்பத்திக்கு சேதன விவசாயம் செய்ய வேண்டும்.
அப்போதுதான் மனித வர்க்கம் ஆரோக்கியமாக வாழமுடியும். இன்று நாம் தினம் தினம் உண்ணும் உணவுகளுடாக கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சை உள்ளெடுத்துவருகிறோம். இதற்கு இன்றைய உணவுற்பத்திதான் அடிப்படைக்காரணமாகும்.
ஒரு சேதன விவசாயி பின்வரும் செயற்பாடுகளை அறிந்திருத்தல் வேண்டும்.
• மண் கட்டமைப்பை மாற்ற வேண்டும். அதாவது மண்ணை சிறு சிறு பாத்திகளாக்கி அதை மட்டும் நன்றாக பண்படுத்தல் மூலம் மண் கட்டமைப்பை மாற்றலாம்.
• மண் துணிக்கைகளுக்குள் மண் நுண்ணங்கிகள் உள்வாங்கப்படுவதால் மண் கருவளம் நிறமாறுவதால் நீர்ப்பற்றாக்குறை ஏற்;படும்.
• பயிர் செய்யப்பட்ட இடங்களில் கூடுதலாக மயிர்த்துளைகள் காணப்படுவதால் நீர் இலகுவாக இறங்கும்.
• பயிர் செய்வதற்கு தொங்கல் கூடுதலாக காணப்படுவதால் இருவாட்டி மண் சிறந்தது.
• மண் கருவளங்களை அதிகரிக்க மீன் ஊக்கக்கரைசல்,மண் புழுக்கரைசல்,கூட்டெரு,பஞ்ச கௌவியம் போன்றன இடலாம்.
• சேதனப்பசளை தயாரிப்பதற்கு இலைகள், வைக்கோல்,மாட்டெரு, ஆட்டெரு போன்றனவற்றை பயன்படுத்தலாம்.
• நீர்ப்பாவனையை குறைப்பதற்கு பத்திர கலவையிடல் முறையினை பயன்படுத்த முடியும். அதாவது கல் பத்திரகலவை,உலர்
பத்திரகலவை முறை மூலம் நீர்ப்பாவனையை குறைக்கலாம்.
• வருடம் முழுதும் பயன் தரக்கூடிய பயிர்களை தெரிவு செய்து நாட்ட வேண்டும்.
• சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப பயிர்தெரிவு இருக்க வேண்டும்.
• களைகளை கட்டுப்படுத்தும் பொறிமுறைகளாக பிடுங்குதல்.
சேதன விவசாயத்தினால் சேமிப்பு அதிகரிக்கும், தனி நபர் வருமானம் கூடுதலாக கிடைக்கும் உழைப்பு சுரண்டப்படமாட்டாது என்பதனை நம்மவர் கவனத்தில் கொள்ளவேண்டும்.
சேதனப்பசளையை எவ்வாறு தயாரித்தல் என்பது தொடர்பில் கல்முனை விவசாய கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ளு.சுரேஸ்குமார் மனித அபிவிருத்தி தாபனத்தினால் நடத்தப்பட்ட சேதனை விவசாயம் செய்வது தொடர்பான பல விழிப்புணர்வு கருத்தரங்கில் செய்கைமுறையுடன் விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
இதில் கல்முனைப்பிராந்தியத்தின் பல பாகங்களிலுமிருந்தும் விவசாய பயிர்செய்கையை மற்றும் வீட்டுத்தோட்டத்தை மேற்கொள்ளும்; விவசாயிகள்; 41 பேர் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டார்கள்.
அதன் நோக்கமாக கிராம மக்களை ஒன்றிணைத்து குழு அமைத்தல் சேதன விவசாயம் பற்றிய மக்களுக்கு அறிவினை ஏற்படுத்தல் சேதன விவசாயம் செய்யும் முறை அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளைகளையும் அறிந்து கொண்டனர். பெண்களால் மேலதிக வருமானத்தை பெறுவதற்கான உத்திகளை அறிந்து கொண்டனர்.
சேதனப் பசளையை எவ்வாறு தயாரிப்பது ?
விவசாய கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சேதனப் பசளை தயாரிப்பதற்கான முறையை இவ்வாறு விளக்குகிறார்:
இயற்கையில் கிடைக்கும் சேதன, அசேதன கழிவுகளை பயன்படுத்தி பசளை தயாரிக்கும் போது அசேதன கழிவுகளானது இலகுவில் பிரிகையடையாத நிலையில் காணப்படுகின்றது.
ஆனால் சேதன கழிவானது குறுகிய காலத்தில் பிரிகையடையக் கூடியதாகும் உதாரணமாக சாம்பல், முட்டைக்கோது, தேயிலைத்தூள்,மிருக கழிவு,சமையல் கழிவு,பயிர் மீதிகள் போன்றனவற்றைக் குறிப்பிடலாம்.
இவற்றை எடுத்து படைபடையாக படிமுறை மூலம் பதப்படுத்தல் வேண்டும். இச் சேதனப் பசளையானது இரு முறைகள் மூலம் செய்யப்படுகின்றது. அதாவது குவியல் முறை மூலமும் குழி முறை மூலமும் செய்யப்படுகின்றது. குவியல் முறையானது நிழலான இடங்களில் செய்யக்கூடியதாகும்.
குழி முறையானது வரண்ட வலயங்களில் செய்யக் கூடியதாகும். வரண்ட வலயங்களி;ல் ஈரத்தன்மை காய்ந்து போய் விடுவதனால் இம் முறை பயன் படுத்தப்படுகின்றது.
சேதனப் பசளை செய்யும் போது முதலில் இடத் தெரிவு முக்கியமானதாகும். இடமானது 1 ½ அ அகலம் உடையதாகவும் நீளம் எமது தேவைக்கேற்ப்ப எடுத்துக் கொள்ளலாம். பின்னர் உரிய பொருட்களை படைபடையாக இட்டு இடையிடையே காற்றுப் புகுவதற்காக தடிகளை நட வேண்டும் மழை தாக்காமல் மேலே ஓலை, பொலித்தீன் போன்றவற்றை இட்டு மூட வேண்டும். வெயில் காலமானால் தண்ணீர் ஊற்ற வேண்டும். 3-4 நாள் சென்ற பிறகு தடிகளை அசைத்து காற்று புக வைப்பதுடன், 2-3 வாரங்கள் சென்ற பிறகு புரட்டுதல் வேண்டும்.
இதனை 2 மாதம் சென்றதன் பின் 100 வீதம் உடனடியாக பாவிக்க முடியும்.இதன் நன்மைகளாக சிக்கனமாதாகவும் போசாக்கு அடங்கியதாகவும் பயிர்களிடையே வேர் ஓட்டத்தை கூட்டக் கூடியதாகவும் காணப்படுகின்றது.
Post a Comment