Header Ads

test

யாழ் வீராங்கனை இருவரின் வியக்க வைக்கும் சாதனை.

 இலங்கை 21 வயது மகளிர் கிரிக்கெட் தேசிய 20 பேர் கொண்ட அணியில், யாழ்ப்பாண வீராங்கனைகள் இருவர் இடம்பிடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, மகாஜனக் கல்லூரியின் முன்னாள் மாணவியும் (2019 A/L) ஶ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் விளையாட்டு விஞ்ஞானமும் முகாமைத்துவமும் கற்கைநெறியின் முதலாம் வருட மாணவியுமான சானு பாஸ்கரன் இடம்பெற்றுள்ளார்.

மேலும், இவருடன் யா/ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் பழைய மாணவி மதுரிகா முரளிதாசனும் தெரிவாகியுள்ளார். சானு பாஸ்கரன் (Shanu Baskaran) கடந்த வருடம் இலங்கை மகளிர் உதைபந்தாட்ட தேசிய அணியிலும் தெரிவாகி தெற்காசிய உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ண போட்டியிலும் பங்குபற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 2019 இல் யா/மகாஜனக் கல்லூரி 20 வயது பெண்கள் உதைபந்தாட்ட அணி தேசியமட்ட சாம்பியனாகிய போது சானு பாஸ்கரன் விளையாடினார் என்பதுடன் இறுதிப்போட்டியில் வெற்றிக்கோல் போட்டார் என்பதும் சிறப்பம்சம் ஆகும்.

இரு துறைகளிலும் தனது அபார திறமைகளை வெளிப்படுத்திவரும் சானு பாஸ்கரன் 2019 A/L பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்று, விளையாட்டு விஞ்ஞானமும் முகாமைத்துவமும் கற்கைநெறியை விரும்பி தெரிவுசெய்து, ஶ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் முதலாம் வருட மாணவியாக பயின்று வருகின்றார்.

No comments