Header Ads

test

யாழ் கொடிகாமத்தில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் சந்தை கட்டிடத்தை முட்டி மோதியது.

 யாழ்.கொடிகாமம் சந்தியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. வீதி கடவை சமிக்ஞை முடியும் நேரத்தில் சந்தியை கடக்க முயன்று வேக கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் சந்தைக் கட்டத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து சம்பவம் சற்று முன்னர் A9 வீதி கொடிகாமம் சந்தியில் இடம்பெற்றுள்ளது. இதன்போது எவருக்கும் பாதிப்புக்கள் இல்லை, எனினும் டிப்பர் வாகனம் சந்தைக் கட்டடத்துடன் மோதி விபத்து இடம்பெற்றதால் டிப்பர் வாகனம் முன்பகுதி சேதமடைந்துள்ளது.

கொடிகாமம் சந்தியில் தானியங்கி ஒளிச் சமிக்ஞை விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதன் நேரம் முடிவடையும்போது இரண்டு டிப்பர் வாகனங்கள் வேகமாக சந்தியை கடக்க முயற்சித்துள்ளன.

இதன்போது யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி வேகமாக முன்னே பயணித்த டிப்பர் வாகனம் சடுதியாக நிறுத்தியது. இந்நிலையில் பின்னே வேகமாக வந்த இரண்டாவது டிப்பர் வாகனம் நிறுத்த முற்பட்டபோதும் கட்டுப்பாட்டை இழந்து சந்தை கட்டடத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.  

மேலும் இந்த விபத்துசம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.





No comments