இன்று யாழில் சந்திக்கவுள்ள முக்கிய கட்சித் தலைவர்கள்.
தமிழ் தலைமைகள் இன்று(02) யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடகப் பேச்சாளர் கு. சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
13ஆம் திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக, அது ஆரம்ப கட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட நிலையிலேயே, அதனை நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்தை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கான கலந்துரையாடலாக இது அமையும் எனவும்,
ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் இன்று யாழ். திண்ணை ஹோட்டலில் இக்கலந்துரையாடல் நடைபெறும் என அவர் கூறியுள்ளார்.
இக்கூட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாய மக்கள் விடுதலை முன்னணியின்( புளட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் சிறிகாந்தா ஆகியோர் கலந்து கொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment