மின்சாரம் தாக்கி மூன்று பிள்ளைகளின் தந்தை மரணம்.
மூன்று பிள்ளைகளின் தந்தை மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் துன்னாலை ஆண்டாள் வளவைச் சேர்ந்த வி.விஜிதரன் (வயது-33) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
கரவெட்டி வடக்கில் உள்ள வீடொன்றில் இன்று பிற்பகல் ஒரு மணியளவில், வீட்டு கூரை வேலையில் ஈடுபட்டிருந்த போது தகரம் ஒன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
Post a Comment