வவுனியா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.
வவுனியா உள்ள பேராறு நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டு இருப்பதால் அதன் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் திலீபன் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக வவுனியாவில் தாழ்வான நிலப் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன், குளங்களின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதை காண கூடியதாக உள்ளது.
இந்நிலையில் வவுனியா பேராறு நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைந்துள்ளது. இதன் காரணமாக பேராறு நீர்த் தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டு இருப்பதால் அதன் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பேராறு நீர் தேக்கத்தின் கீழ் உள்ள புதுக்குளம், சாஸ்திரிகூழாங்குளம், ஈச்சங்குளம், மருதமடு, பாலமோட்டை ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
Post a Comment