இலங்கை பெண் ஒருவருக்கு கிடைத்த உயரிய விருது.
இலங்கை நடனத்தை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்ற முன்னோடி நடனக் கலைஞரான கலாநிதி வஜிர சித்திரசேன(Dr. Vajira Chithrasen) அவர்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் பத்மஸ்ரீ விருது நேற்று (17) அலரிமாளிகையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்(Mahinda Rajapaksa)ஷ மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.இ.கோபால் பாக்லே(HE Gopal Bagley) ஆகியோர் தலைமையில் அலரிமாளிகையில் இந்த வைபவம் நடைபெற்றது.
இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெறுவோர் பட்டியல் ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று வெளியிடப்படுகிறது. 2020 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர்களில் இரண்டு இலங்கைப் பெண்கள், டொக்டர் வஜிரா சித்திரசேன (கலைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பு) மற்றும் பேராசிரியர் இந்திரா தசநாயக்க(Prof. Indra Dasanayake) (அமரர்) ( இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் செய்த பங்களிப்பு)க்காக வழங்கப்பட்டது.
இந்த விருதுகள் வழங்கும் விழா கடந்த 8-ம் திகதி டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடைபெற்றது.
இவ்விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத திருமதி வஜிரா சித்திரசேன அவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. ஹெலத்தின் மகா கந்தர்வ டாக்டர் பண்டித் டபிள்யூ. டி. அமரதேவாவுக்கும் 2002 இல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment