யாழில் வாகனத்தை மறித்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.
யாழில் அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறி ஆடுகளை ஏற்றிச் சென்ற வாகனத்தை யாழ்.பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியதோடு இருவரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தின்போது, யாழ்.தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட J/294 நாவற்குழி பகுதியில் இருந்து 68 ஆடுகள் கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.
மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்.ஐந்துசந்தி பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment