பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய மாணவிக்கு நேர்ந்த சோகம் - சந்தேக நபரை தேடி வலை விரித்துள்ள பொலிஸார்.
பண்டாரவளை , எல்ல கரந்தகொல்ல பிரேதேசத்தில் வீதியில் சென்ற மாணவி ஒருவரை வழிமறித்து நபர் ஒருவர் துஸ்பிரயோகம் செய்ய முயன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் குறித்த 17 வயது மாணவி பாடசாலையில் இருந்து வீடு திரும்பியபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஸ்கூட்டரில் வந்த நபர் ஒருவர் வீதியில் சென்ற மாணவியை வழி மறித்து அவரை அருகே உள்ள பாழடைந்த தோட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் அந்த மாணவி சந்தேக நபரின் கையை கடித்து கல்லால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸார் சந்தேக நபரை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் பிரதேசம் பாழடைந்த பகுதியாக காணப்படுவதால் கடந்த காலத்திலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் இடம்பெற்றுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment