Header Ads

test

கிளிநொச்சியியை சேர்ந்த இருவர் கொழும்பில் பொலிஸாரால் மடக்கி பிடிப்பு.

 கிளிநொச்சியை சேர்ந்த இருவர் இராஜகிரியவில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைதான சந்தேகநபர்கள் 23 வு 28 வயதுடைய தர்மபுரம் மற்றும் பிரமந்தனாறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இதேவேளை கிளிநொச்சி, தர்மபுரம், பிரமந்தனாறு பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க முற்பட்ட பொலிஸ் குழுவொன்றை தாக்கி, கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 4ஆம் திகதி இந்த தகராறு பதிவாகியிருந்த நிலையில், சந்தேகநபர்கள் தலைமறைவாக இருந்த நிலையில், குறித்த இருவரும் வேலை செய்யும் இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

மேலும் கைதான சந்தேகநபர்கள் இன்று நுகேகொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளனர்.


No comments