Header Ads

test

யாழ் கோப்பாய் பகுதியில் படையினருக்கும் பொது மக்களுக்குமிடையில் முறுகல்.

 யாழ்.கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன் துப்பரவு பணியில் ஈடுபட்ட நிலையில் அங்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இராணுவத்தினரும், பொலிஸாரும் நடந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தற்போது மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் அக்காணியின் முன்பக்கமாக வீதியின் இருமருங்கினையும் துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்போது, யாழ்.கோப்பாய் பொலிஸார் மற்றும் பெருமளவான இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். சிவில் உடையில் வந்த இராணுவத்தினர் சிலர் தாமும் துப்பரவு பணியில் ஈடுபடுவதாக துப்பரவு பணியில் ஈடுபட்டு இருந்தவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டனர்.

இதேவேளை, இராணுவம் மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்கள், அங்கிருந்த ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்களை அச்சுறுத்தும் விதமாக புகைப்படம் எடுத்ததுடன் வாகன இலக்கங்களையும் பதிவு செய்தனர்.   

No comments