Header Ads

test

நாட்டில் திடீரென ஒன்று கூடிய தமிழ்க் கட்சிகள் - கலந்துரையாடலில் எடுத்த முக்கிய தீர்மானம் என்ன.?

  நாட்டில் 13வது திருத்தச் சட்டத்தை மேம்படுத்த தமிழ் தேசியக் கட்சிகளுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி , ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் என்பன யாழில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இது தொடர்பில் தெரியவருவது,

 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துமாறு இந்தியாவை கோருவது தொடர்பில் 13வதுதிருத்தத்துக்கு மேலதிகமாக அதிகாரங்களை பெறுவதற்கான வழிவகைகள் குறித்து ஆராய யாழ்ப்பாணத்தில் இன்று கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த கூட்டமானது யாழ்ப்பாணத்தில் உள்ள அதனியார் விடுதி ஒன்றில் தமிழீழ விடுதலை இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலை கழகம், ஈழமக்கள் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இக்கூட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.       


No comments